Teaching Tips on Tap - Season 2: Regional Languages
Based on a Needs Analysis conducted by CTL (IIMB) that included the inputs of faculty from colleges and universities across India, we are building a database of video clips that we hope will help teachers be more effective in the classroom. They are packed with practical, easy-to-implement tips, but brief--you can choose to watch just one each day or binge watch five at a stretch! Keep checking in for teaching tips on tap.
ತರಗತಿಯ ಮೊದಲು ಅಧ್ಯಾಪಕರ ತಯಾರಿ ಮತ್ತು ತರಗತಿಯಲ್ಲಿ ವಿದ್ಯಾರ್ಥಿಗಳ ಪಾಲ್ಗೊಳ್ಳುವಿಕೆ ಕುರಿತು ಸಲಹೆಗಳು
M S Sriram, Visiting Faculty, Public Policy
Chairperson, Centre for Public Policy
ಭಾರತೀಯ ವ್ಯವಸ್ಥಾಪ್ರಬಂಧ ಸಂಸ್ಥೆ ಬೆಂಗಳೂರಿನ ಸಾರ್ವಜನಿಕ ನೀತಿ ವಿಷಯವನ್ನು ಕಲಿಸುವ ಪ್ರೊ. ಶ್ರೀರಾಮ, ತರಗತಿಯ ಮೊದಲು ಅಧ್ಯಾಪಕರ ತಯಾರಿ ಮತ್ತು ತರಗತಿಯಲ್ಲಿ ವಿದ್ಯಾರ್ಥಿಗಳ ಒಳಗೊಳ್ಳುವಿಕೆ ಈ ವಿಷಯಗಳಂತೆ ಕೆಲವು ಸಲಹೆಗಳನ್ನು ಹಂಚಿಕೊಂಡಿದ್ದಾರೆ.
ಪ್ರಾಧ್ಯಾಪಕರಿಗೆ ತರಗತಿಗೆ ಹೋಗುವ ಮೊದಲು ತಯಾರಿ ಮಾಡಿಕೊಳ್ಳುವುದು ಬಹಳ ಮುಖ್ಯ. ಈ ತಯಾರಿಯ ಮೂಲಕ ನೀವು ಎಲ್ಲಾ ಪ್ರಮುಖ ಅಂಶಗಳನ್ನು ಒಳಗೊಂಡಿರುವಿರಿ ಎಂದು ನೀವು ತಿಳಿದುಕೊಳ್ಳುತ್ತೀರಿ. ಪ್ರೊ. ಶ್ರೀರಾಮ್ ಅವರು ತಮ್ಮ ತರಗತಿಗಾಗಿ ತಾವು ಮಾಡಿಕೊಳ್ಳುವ ಕೆಲವು ತಯಾರಿಯ ಅಭ್ಯಾಸಗಳನ್ನು ಹಂಚಿಕೊಂಡಿದ್ದಾರೆ. ಅಲ್ಲದೆ, ತರಗತಿಯಲ್ಲಿ ವಿದ್ಯಾರ್ಥಿಗಳ ಒಳಗೊಳ್ಳುವಿಕೆ ಮತ್ತು ವೈವಿಧ್ಯಮಯ ಹಿನ್ನೆಲೆಯುಳ್ಳ ವಿದ್ಯಾರ್ಥಿಗಳಿಂದ ತುಂಬಿದ ತರಗತಿಯಲ್ಲಿ ಪ್ರತಿಯೊಬ್ಬ ಕಲಿಯುವವರು ಒಂದೇ ತಿಳುವಳಿಕೆಯ ಮಟ್ಟದಲ್ಲಿದ್ದಾರೆ ಎಂದು ಖಚಿತಪಡಿಸಿಕೊಳ್ಳುವುದು ಹೇಗೆ ಅದರ ಬಗ್ಗೆ ಕೆಲವು ಅಂಶಗಳನ್ನು ಹಂಚಿಕೊಂಡಿದ್ದಾರೆ. ಕೊನೆಯದಾಗಿ, ತರಗತಿಯಲ್ಲಿ ವಿದ್ಯಾರ್ಥಿಗಳು ಕೇಳುವ ಯಾವುದಾದರೂ ಪ್ರಶ್ನೆಗಳಿಗೆ ಪ್ರಾಧ್ಯಾಪಕರ ಬಳಿ ಉತ್ತರವಿಲ್ಲದಿದ್ದ ಪರಿಸ್ಥಿತಿಯನ್ನು ಹೇಗೆ ನಿರ್ವಹಿಸುವುದರ ಬಗ್ಗೆ ಹೇಳಿದ್ದಾರೆ.
ವಿದ್ಯಾರ್ಥಿಗಳೊಂದಿಗೆ ನೇರ ಸಂವಾದ ನಡೆಸುವುದು ಮತ್ತು ವಿದ್ಯಾರ್ಥಿಗಳ ಹಿನ್ನೆಲೆಯ ಬಗ್ಗೆ ಮಾತನಾಡುವುದರಿಂದ (ಶೈಕ್ಷಣಿಕ, ಅನುಭವ) ವಿದ್ಯಾರ್ಥಿಗಳು ತಮ್ಮ ಪ್ರಾಧ್ಯಾಪಕರೊಂದಿಗೆ ಹೆಚ್ಚು ಅನುಕೂಲಕರ ಮತ್ತು ಆತ್ಮವಿಶ್ವಾಸವನ್ನುಂಟುಮಾಡುತ್ತದೆ. ಇವುಗಳಂತೆಯೇ ಪ್ರೊ. ಶ್ರೀರಾಮ್ ಅವರು ಈ ವೀಡಿಯೊದಲ್ಲಿ ಇನ್ನೂ ಕೆಲವು ಸಲಹೆಗಳನ್ನು ಹಂಚಿಕೊಂಡಿದ್ದಾರೆ.
ஒரு சிறந்த கல்வியாளராக மாறுவதற்கான உதவிக்குறிப்புகள்
B Mahadevan, Professor, Production & Operations Management
இந்த குறுகிய வீடியோவில், பேராசிரியர் பி.மகாதேவன் சிறந்த கல்வியாளர்களாக ஆக விரும்பும் அனைத்து கல்வியாளர்களுக்கும் சில விஷயங்களை முன் வைக்கிறார். மேலும் கற்பித்தலில் தனது அனுபவங்களின் அடிப்படையில் அவர்களுக்கு சில எளிய விதிமுறைகளை வழங்குகிறார். பேராசிரியர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற சில கருத்துக்களை முன்வைக்கிறார் (1) ஒரு மணி நேரம் வகுப்பறையில் கற்பிக்க சுமார் 4-5 மணி நேரம் விஷயங்களை சேகரிப்பது. கல்வியாளர்கள் வெவ்வேறு பாடப்புத்தகங்கள், மற்றும் ஆராய்ச்சி முடிவுகள் கலந்தாலோசிப்பதில் அதிக நேரத்தை செலவிடுவதால், மேலும் வெற்றிகரமாக அவர்கள் தங்கள் வகுப்பை கற்பிக்க முடியும். அதிகம் இவ்வாறாக படிப்பத்தால் அவர்களின் நம்பிக்கைஅதிகரிக்கும். (2) அவர் ஆசிரியர்களுக்கு, குறிப்பாக இளம் ஆசிரியர்களுக்கு விரிவான பாட திட்டங்களை எழுதுவதில் நேரத்தை முதலீடு செய்யுமாறு அறிவுறுத்துகிறார். (3) ஒவ்வொரு வகுப்பிற்கும் பிறகு, பாட திட்டத்தில் எது சரியாக இருந்தது, எது சரியாக இல்லை என்பதை கல்வியாளர்கள் உடனடியாகக் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப அதை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார். பேராசிரியர் மகாதேவனின் கூற்றுப்படி, ஒரு நல்ல ஆசிரியர் (4) வகுப்பில் எழக்கூடிய சூழ்நிலைகள் மற்றும் மாணவர்களின் கேள்விகளை எதிர்பார்க்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்.
மேலும் விதிகளைப் பின்பற்ற ஆசிரியர்களை ஊக்குவிப்பதன் மூலம் வீடியோவை முடிக்கிறார். மாணவர்கள் தங்கள் வகுப்புகளை நேசிப்பார்கள். அதே நேரத்தில் தாங்களும் ஒரு சிறந்த கல்வியாளர்களாக மாறும் தங்கள் கனவை அடைய முடியும்.
ஒவ்வொரு வகுப்பின் விரிவான பாடதிட்டத்தின் முக்கியத்துவம்
B Mahadevan, Professor, Production & Operations Management
வகுப்பறையில் ஒரு சிறந்த முறையில் பாடங்களை கொண்டுசெல்வது என்பது வகுப்பில் ஒரு கோர்வையான கதையை கூறுவது போன்றது. இதை அடைவதற்கு ஒரு விரிவான பாட திட்டம் அவசியம் என்று பேராசிரியர் பி. மகாதேவன் கூறுகிறார். அத்தகைய ஒரு திட்டத்தை உருவாக்குவதற்கான சில பயனுள்ள உதவிக்குறிப்புகளை அவர் கல்வியாளர்களுக்கு வழங்குகிறார். இந்தத் திட்டத்தை உருவாக்குவதற்கான முதல் படியாக, அன்றைய வகுப்பில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து ஆசிரியர்கள் முதலில் முடிவு செய்ய வேண்டும் என்று பேராசிரியர் மகாதேவன் அறிவுறுத்துகிறார். பின்னர் வகுப்பில் என்ன தலைப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும், அவற்றை எவ்வாறு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது குறித்து தெளிவாக சிந்திக்க வேண்டும். இறுதியாக, குறிப்பிட்ட வகுப்பு நேரத்திற்க்கு (90 நிமிடம் அல்லது 60 நிமிடம்) திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை காலவரிசைப்படி ஒழுங்கமைக்குமாறு அவர் கல்வியாளர்களுக்கு அறிவுறுத்துகிறார். வகுப்பறையில் எழக்கூடிய கேள்விகளை கல்வியாளர்கள் எதிர்பார்த்து, அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் எவ்வளவு நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு திட்டமிடபட்ட விஷயங்களை ஒரு தாளில் குறித்து கொண்டு வகுப்பறைக்கு செல்லவேண்டும்.
வகுப்பிற்கு சென்று திரும்பியவுடன் செய்ய வேண்டிய குறிப்புடன் அவர் பேச்சை முடிக்கிறார். வகுப்பில் ஏற்கனவே திட்டமிடபட்ட வழிமுறையில் ஏதேனும் மாறுபாடுகள் இருந்தால் அவைகளயும் எடுத்து சென்ற தாளில் குறித்துகொள்ளுமாறு கல்வியாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.